அகமதாபாதைச் சேர்ந்த விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான சாட்லியோ லேப்ஸ் (Satleo Labs), TAPAS-1 (Thermal Access Platform for Analytics & Solutions-1) கருவியை, ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிரான்ஸ்போர்ட்டர்-18 பகிர்வுப் பயணத் திட்டத்தின் கீழ் ஏவியது. இது தனியார் நிறுவனம் உருவாக்கிய இந்தியாவின் முதல் வணிக வெப்பப் படமெடுப்புக் கருவி (payload) ஆகும். TAPAS-1 என்பது 1.5 கிலோ எடையுள்ள, கட்டமைப்பு மாற்றக்கூடிய க்யூப்சாட் கருவி; வெப்ப அகச்சிவப்புக் கதிர்வீச்சைப் பயன்படுத்தி பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிடுகிறது. இத்தரவுகள் வேளாண்மை, நகர வெப்ப ஆய்வுகள், வளக் கண்காணிப்புக்குப் பயன்படும்.