மறைமுகப் பசியை (hidden hunger) எதிர்த்துப் போராட, இந்தியா குஃப்ரி ஜமுனியா (Kufri Jamunia) என்ற உயிரூட்டமேற்றப்பட்ட (biofortified) ஊதா நிற உருளைக்கிழங்கு ரகத்தை உருவாக்கியுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்–மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CPRI) உருவாக்கிய இந்த ரகம் 2024-இல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு 100 கிராம் கிழங்கிலும் 42.75 மி.கி வைட்டமின் C, 3.22 மி.கி இரும்புச்சத்து, 2.28 மி.கி துத்தநாகம் கிடைக்கின்றன. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பியாகச் செயல்படும் இயற்கை நிறமிகளான ஆந்தோசயனின்களும் இதில் உள்ளன. மக்கள் தினமும் உண்ணும் உணவின் வழியே முக்கிய வைட்டமின்களையும் தாதுக்களையும் சேர்ப்பதால், ஊட்டச்சத்து மேம்பட இது உதவுகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட வட இந்தியச் சமவெளிப் பகுதிகளில் சாகுபடி செய்ய இது ஏற்றதாகும்.