2021-2025 காலகட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்ததாகவும், உலகின் மொத்த ஆயுத இறக்குமதியில் சுமார் 8.2% இந்தியாவுடையது என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது. உக்ரைன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து இந்தியா, சவுதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் ஆகியவையும் உள்ளன. இந்தியா ரஷ்யாவைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் குறைத்து, பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதக் கொள்முதலை அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 2011-2015-ல் சுமார் 70%-லிருந்து 2021-2025-ல் சுமார் 40% ஆகக் குறைந்துள்ளது.