தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25-வது அரசுத் தலைவர்கள் கவுன்சில் (Council of Heads of Government) கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார். உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இணைப்பு வசதி (connectivity), புத்தாக்கம், கலாச்சார–மனிதாபிமானப் பரிமாற்றங்கள் ஆகியவையும் முக்கியப் பொருள்களாக இடம்பெற்றன.