இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), ISRO-வின் தேசிய தொலையுணர்வு மையத்துடன் (NRSC) இணைந்து முதல் தேசிய நெடுஞ்சாலை பசுமைப் பரப்புக் குறியீட்டை (NH-GCI) 2025–26 வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள பசுமை மரவிதான (canopy) சதவீதத்தைச் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இக்குறியீடு அளவிடுகிறது. Resourcesat-2/2A (LISS-IV) செயற்கைக்கோள்களின் உயர் தெளிவுத்திறன் பல்நிறமாலைப் படங்கள் பயன்படுத்தப்பட்டு, Cartosat-2S மூலம் சரிபார்க்கப்படுகின்றன. இயக்கம் மற்றும் பராமரிப்பு நிலையில் உள்ள 24 மாநிலங்களின் சுமார் 30,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் மதிப்பீட்டில் அடங்கும். வெளிப்படைத்தன்மைக்காக இத்தரவுகள் Bhuvan GIS தளத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படுகின்றன.