குஜராத்தில் உள்ள கல்பசர் திட்டத்தில் (Kalpasar Project) தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியாவும் நெதர்லாந்தும் விருப்பக் கடிதத்தில் (Letter of Intent) கையெழுத்திட்டுள்ளன. கல்பசர் என்பது கம்பாத் வளைகுடாவின் குறுக்கே அணை கட்டுவதை நோக்கமாகக் கொண்ட குஜராத் அரசின் பல்நோக்குத் திட்டமாகும். நீர் மேலாண்மை மற்றும் கடற்கரைப் பொறியியலில் நீண்ட அனுபவம் கொண்ட நெதர்லாந்து, இந்த ஏற்பாட்டின் கீழ் இத்திட்டத்துக்குத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.