இந்தியாவின் முதல் உள்நாட்டு அடுக்குமண்டல மிகை அழுத்த பலூன் (stratospheric super-pressure balloon) திட்டமான 'மிஷன் சனா' (Mission SANA) விஜயவாடாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இத்திட்டத்தை ரெட் பலூன் ஏரோஸ்பேஸ் (Red Balloon Aerospace) நிறுவனம் செயல்படுத்தியது. மிகை அழுத்த பலூன்கள் அடுக்குமண்டலத்தில் நீண்ட நேரம் நிலையான உயரத்தில் மிதக்கக்கூடியவை; வளிமண்டல ஆய்வு, புவி கண்காணிப்பு, தகவல்தொடர்புச் சோதனைகளுக்கு இவை பயன்படுகின்றன. இதன் மூலம், இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்பம் கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது.