7வது வேளாண் சூரியமின் உலக மாநாடு 2026 புது தில்லியில் நடைபெறுகிறது; உலகளாவிய தெற்கு (Global South) நாடுகளில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை. வேளாண் சூரியமின் (AgriPV) என்பது ஒரே நிலத்தில் வேளாண்மையும் சூரிய ஒளிமின்னழுத்த மின் உற்பத்தியும் ஒருசேர மேற்கொள்ளும் முறையாகும். ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) நடத்தும் இம்மாநாட்டின் கருப்பொருள் “Powering the Global South”. பயிர் உற்பத்தித்திறன், கொள்கைகள், நிதியுதவி, விவசாயிகளை மையப்படுத்திய மாதிரிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. AgriPV கொள்கைக் கையேடு, இந்திய வேளாண் சூரியமின் கூட்டமைப்பின் (IAA) முடிவெடுக்கும் கருவி, சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தின் (IWMI) சுருக்கத் தொகுப்பு நூல் ஆகியவை வெளியிடப்பட்டன.