2026 அக்டோபர் 20 அன்று, பாரடாங் சுண்ணாம்புக்கல்–சேற்று எரிமலை வளாகம் (Baratang's Karst-Mud-Volcano Complex), அந்தமான் கீழமிழ்வு எரிமலைகள் (Andaman Subduction Volcanoes), சிர்பூர் பண்பாட்டு மற்றும் தொல்லியல் நிலப்பரப்பு (Sirpur Cultural and Archaeological Landscape) ஆகிய மூன்று இந்தியத் தலங்கள் யுனெஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரிய தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பாரடாங் வளாகத்தில் ஜல்கி குகைப் பகுதி உள்ளிட்ட சுண்ணாம்புக்கல் குகைகளும், செயல்படும் சேற்று எரிமலைகளும் உள்ளன. அந்தமான் கடலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான பாரன் தீவு, நார்கொண்டம் தீவு ஆகியவை அந்தமான் கீழமிழ்வு எரிமலைகளில் அடங்கும். சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் மகாநதி ஆற்றங்கரையில் உள்ள சிர்பூரில் கி.பி. 5 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான நினைவுச்சின்னங்கள் உள்ளன. உலகப் பாரம்பரியப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்படுவதற்கு முந்தைய படியே தற்காலிகப் பட்டியல்; தற்போது இந்தியாவில் 45 உலகப் பாரம்பரியத் தலங்கள் உள்ளன.