ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 அன்று சர்வதேச அருவப் பண்பாட்டு மரபு தினம் (International Day of the Intangible Cultural Heritage) கடைப்பிடிக்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள வாழும் மரபுகளின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். 2023 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோவின் (UNESCO) 42-வது பொது மாநாட்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.