இருதரப்பு தூதரக உறவின் 55-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், அடுத்த ஆண்டை (2027) "இந்தியா-வியட்நாம் நட்புறவு ஆண்டாக"க் கடைப்பிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியாவின் 'கிழக்கு நோக்கிச் செயல்படும் கொள்கை' (Act East Policy), இந்தோ-பசிபிக் தொடர்பான 'மகாசாகர்' (MAHASAGAR - பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்கு, ASEAN உடனான விரிவான மூலோபாயக் கூட்டாண்மை ஆகியவற்றில் வியட்நாம் முக்கியக் கூட்டாளியாகும். இரு நாடுகளும் உறவை 'மேம்படுத்தப்பட்ட விரிவான மூலோபாயக் கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்தியுள்ளன; இப்பிராந்தியத்தில் அந்நிலையில் இந்தியாவுடன் உறவு கொண்ட முதல் நாடு வியட்நாம். வியட்நாமுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் இந்தியா அறிவித்தது. இரு நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி 'VINBAX' என அழைக்கப்படுகிறது.