நியூரோமார்ஃபிக் வன்பொருளையும் (மூளையின் செயல்பாட்டைப் பின்பற்றும் வன்பொருள்) செயற்கை நுண்ணறிவு (AI) வழிமுறைகளையும் இணைக்கும் மூளை இணைச் செயலிகளை (Brain Co-processors) உருவாக்க இந்திய அறிவியல் கழகம் (IISc) 'மூன்ஷாட் திட்டத்தை' (Moonshot Project) தொடங்கியுள்ளது. மூளை இணைச் செயலிகள் என்பவை மூளையின் வெவ்வேறு பகுதிகளுடன் இணைந்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் அல்லது மீட்டெடுக்கும் சாதனங்களாகும். சீரான, ஒருங்கிணைந்த இயக்கத்தை மீட்டெடுக்கக்கூடிய AI அடிப்படையிலான மூடிய-சுற்று (Closed-loop) சாதனத்தை இத்திட்டம் உருவாக்கும். பக்கவாதத்திலிருந்து மீண்டவர்களுக்கு அறிவாற்றல் மறுவாழ்வு அளிக்கவும், உணர்வு-இயக்கச் செயல்பாடுகளை மீட்டெடுக்கவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும்.