ஒன்றிய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனம் (IASST), நெய்யைப் பயன்படுத்தி புதிய உயிர்ப் பரப்பு இழுவிசைப் பொருளை (biosurfactant) உருவாக்கியுள்ளது. லாக்டோபேசில்லஸ் பிளான்டாரம் JBC5 என்ற புரோபயாடிக் பாக்டீரியாவைக் கொண்டு, நெய்யை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டது. தோல் மற்றும் காயத் தொற்றுகளை ஏற்படுத்தும் ஸ்டேஃபைலோகாக்கஸ் ஆரியஸ் பாக்டீரியாவுக்கு எதிராக இது வலுவான பாக்டீரிய எதிர்ப்புச் செயல்பாட்டைக் காட்டியது. 60% பால்மமாக்கல் குறியீட்டை எட்டிய இது, 276°C வரை நிலைத்தன்மையுடன் இருந்தது.