DISHA திட்டத்தின்போது குடியரசுத் துணைத் தலைவரும் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சரும் இணைந்து ‘நியாய சேது’ (Nyaya Setu) AI உரையாடல் மென்பொருளை (Chatbot) அறிமுகப்படுத்தினர். நியாய சேது என்பது குரல் முதன்மை (Voice-first) முறையில் இயங்கும், பல மொழிகளை ஆதரிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சட்ட உதவியாளர் ஆகும். சாதாரண குடிமக்கள் சட்டங்களையும் சட்ட நடைமுறைகளையும் எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும். குறிப்பாக, நீதி அமைப்பை அணுகுவதில் மொழி அல்லது எழுத்தறிவுத் தடைகளை எதிர்கொள்வோருக்குச் சட்டத் தகவல்கள் எளிதில் கிடைக்க இக்கருவி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.