பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென் பொருள் அறிவியல் மையத்தின் (CeNS) விஞ்ஞானிகள், மிக அதிக உணர்திறன் கொண்ட அணியக்கூடிய (wearable) அம்மோனியா சென்சாரை உருவாக்கியுள்ளனர். இக்கருவி நச்சு வாயுவான அம்மோனியாவை நிகழ்நேரத்தில் கண்டறிவதால், அதற்கு ஆளாகும் நபர்களை விரைவாக எச்சரிக்க முடியும். அம்மோனியா கசிவு உடல்நல அபாயத்தை ஏற்படுத்தும் இடங்களில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு இத்தகைய சென்சார்கள் பயனுள்ளதாக இருக்கும்.