கிளவுட் கணினி, தரவு மையச் செயல்திறன், நெறிமுறைச் செயற்கை நுண்ணறிவு (Ethical AI) ஆகியவற்றுக்கான நாட்டின் முதல் தரங்களை இந்திய அரசு அறிவித்துள்ளது.
- இந்தியத் தர நிர்ணய அமைவனம் (BIS), இந்தியத் தர நிர்ணய அமைவன விதிகள், 2018-ன் கீழ் இவற்றை வெளியிட்டது.
- இவை சர்வதேசத் தரநிர்ணய அமைப்பு (ISO), சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம் (IEC) ஆகியவற்றின் கட்டமைப்புகளுடன் ஒத்திசைந்தவை.
- தரவு மையங்களின் குளிரூட்டும் திறனை மதிப்பிடக் குளிரூட்டல் திறன் விகிதம் (CER) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- AI தரங்கள் வெளிப்படைத்தன்மை, சார்புநிலைக் குறைப்பு போன்ற நெறிமுறைக் கொள்கைகளை ஊக்குவிக்கின்றன.