கூகுள் டீப்மைண்டின் ஆந்த்ரோகிருஷி (AnthroKrishi) குழு மூலம் இந்தியாவின் முதல் வேளாண் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளைக் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. வேளாண் நிலப்பரப்புப் புரிதல் (ALU) மாதிரி விவசாய நிலங்களை வரைபடமாக்கி நிலப் பகுப்பாய்வுக்கு உதவுகிறது. வேளாண் கண்காணிப்பு மற்றும் நிகழ்வுக் கண்டறிதல் (AMED) மாதிரி பயிர் நிலைமைகள், நிலப் பயன்பாட்டு மாற்றங்கள், வேளாண் நிகழ்வுகளைப் பெரிய அளவில் கண்காணிக்கிறது. இத்தகைய மாதிரிகள் அரசுகளுக்கும் விவசாயிகளுக்கும் திட்டமிடல், பயிர்க் கண்காணிப்பு, இலக்கு சார்ந்த சேவை வழங்கலில் உதவக்கூடும்.