81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே, நியூயார்க்கில் இந்தியா-கரிகாம் (CARICOM – கரீபியன் சமூகம்) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. 2024 நவம்பரில் கயானாவில் நடந்த 2-வது இந்தியா-கரிகாம் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்றது. 12 கரிகாம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பெலிஸ் பிரதிநிதிகள், கரிகாம் பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். வர்த்தகம், முதலீடு, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் ஆளுகை, காலநிலை மீள்திறன், ஆற்றல் ஒத்துழைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டன. ஐநா சீர்திருத்தம், காலநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு, நாடு கடந்த குற்றங்கள் ஆகியவற்றில் ஒத்துழைக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன. 2028–29 ஐநா பாதுகாப்பு அவை (UNSC) உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆதரிக்க கரிகாம் முடிவு செய்தது.