உலக வங்கிக் குழுமத்தின் ‘உலக வளர்ச்சி அறிக்கை 2026: செயற்கை நுண்ணறிவின் வாக்குறுதி’ (World Development Report 2026: The Promise of Artificial Intelligence)-ஐ ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புது டெல்லியில் வெளியிட்டார். குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு AI வழங்கும் வாய்ப்புகளையும் சவால்களையும் இவ்வறிக்கை ஆராய்கிறது. அதிகச் செலவில் புதிதாக மாதிரிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள AI மாதிரிகளை ஏற்று உள்ளூர் மொழிகள், வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்பத் தகவமைக்கப் பரிந்துரைக்கிறது. வளர்ந்த பொருளாதாரங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட வேலைகளுடன் ஒப்பிடுகையில், இந்திய வேலைகளில் 4%-க்குச் சற்று அதிகமானவையே உடனடித் தானியங்கிமயமாக்கல் அபாயத்தில் உள்ளன. 2025-ல் இந்தியாவில் சுமார் 50,460 AI நிபுணர்கள் இருந்தனர்; ஆனால் 2011–2024 காலத்தில் 200 முன்னணி AI ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை இந்தியா இழந்துள்ளது என அறிக்கை கூறுகிறது.