புது தில்லியில் உள்ள வணிஜ்ய பவனில் தேசிய உத்திசார் வர்த்தகக் கட்டளை மையத்தை (NSTCC) ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திறந்து வைத்தார். வர்த்தகத் துறையும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகமும் (DGFT) சேர்ந்து அமைத்துள்ள இம்மையம், வர்த்தக நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுக்கான மைய அமைப்பாகச் செயல்படும். நிகழ்நேரக் கண்காணிப்பு, சான்றுகளின் அடிப்படையில் கொள்கை வகுத்தல், கூடுதல் வெளிப்படைத்தன்மை, விரைவான அனுமதிகள் ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும். இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடுகள் (IEC), முன்கூட்டிய அங்கீகாரம், EPCG திட்டம், பிறப்பிடச் சான்றிதழ்கள், SCOMET உரிமங்கள் ஆகியவற்றுடன் ஏற்றுமதிக் கடமைகள், விதிமுறை இணக்கம், வர்த்தகச் செயல்பாடு ஆகியவற்றையும் இது கண்காணிக்கிறது. DGFT இணையதளம், Trade Connect மின்தளம் ஆகியவற்றின் தரவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வர்த்தகத் தடைகள், புதிதாக உருவாகும் ஏற்றுமதிச் சந்தைகள், முழுமையாகப் பயன்படுத்தப்படாத தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) ஆகியவற்றைக் கண்டறிய இது உதவுகிறது.