ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது; 2026-இல் அது மே 5 அன்று வந்தது. மூச்சுக்குழாய்கள் வீங்கிச் சுருங்குவதால் மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு, இருமல் ஏற்படும் நீண்டகால நுரையீரல் நோயான ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள்: 'Access to anti-inflammatory inhalers for everyone with asthma – still an urgent need' (ஆஸ்துமா உள்ள அனைவருக்கும் அழற்சி எதிர்ப்பு இன்ஹேலர்கள் கிடைப்பது - இன்னும் அவசரத் தேவை). அடிப்படை அழற்சியைக் கட்டுப்படுத்தும் இம்மருந்துகள் ஒவ்வொரு நோயாளிக்கும் சென்றடைய வேண்டும் என இது வலியுறுத்துகிறது.