உஸ்பெகிஸ்தானில் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மூலம் வணிகப் பணம் செலுத்துதலைச் சாத்தியமாக்க, NPCI சர்வதேசப் பணப்பரிவர்த்தனை நிறுவனம் (NIPL) அந்நாட்டின் தேசிய வங்கிகளிடைச் செயலாக்க மையத்துடன் (NIPC) கூட்டு சேர்ந்துள்ளது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், மொரீஷியஸ், நேபாளம், பூடான், கத்தார், இலங்கை, கம்போடியா, கிரீஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து UPI-ஐ ஏற்கும் 11-வது நாடாக உஸ்பெகிஸ்தான் மாறியுள்ளது.