உலக அளவில் போட்டியிடக்கூடிய விளையாட்டுப் பொருட்கள் தொழிலை உருவாக்கும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் 2026–27-இல் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு 2026–2033–34 காலத்துக்கு ₹1,856.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரித்து இறக்குமதிச் சார்பைக் குறைப்பது இதன் நோக்கம். இதில் ₹1,130 கோடி முதலீடு மற்றும் உற்பத்திக்கும், ₹105 கோடி சர்வதேசத் தரச் சான்றிதழுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மண்டலங்கள் (SGMZs) உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சோதனை வசதிகள், வடிவமைப்பு மையங்களை ஒருங்கிணைக்கும்; குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMEs) ஆதரவு வழங்கப்படும். கேலோ பாரத் நீதி 2025, மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத் ஆகியவற்றுக்கு இணங்க, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, உலகச் சந்தை அணுகல் ஆகியவற்றையும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது.