ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் ‘பிரதமர் விக்சித் கிராம் ஸ்வராஜ் யோஜனா’வுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2026–27 முதல் 2030–31 வரையிலான இந்த ஒன்றிய அரசு நிதியுதவித் திட்டத்துக்கு (Centrally Sponsored Scheme) மொத்தம் ₹7,395.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த திட்டமிடல், டிஜிட்டல் ஆளுகை, திறன் மேம்பாடு, மக்கள் பங்கேற்பு, நிதிப் பொறுப்புடைமை ஆகியவற்றின் மூலம் கிராம ஊராட்சிகளை வலுப்படுத்துவது இதன் நோக்கம். ஆண்டுதோறும் 2.55 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டங்கள் (GPDPs), 2.55 லட்சம் இணையவழித் தணிக்கைத் திட்டங்கள், ஒவ்வொரு பிரச்சாரத்திலும் குறைந்தது 1 கோடி மக்களைச் சென்றடையும் விழிப்புணர்வு இயக்கங்கள் ஆகியவை இலக்குகள். திட்டமிடல் மற்றும் கணக்கியலுக்கு eGramSwaraj, தகவல் தொடர்புக்கு PANCHAM (Panchayat Assistance and Messaging Chatbot), இணையவழித் தணிக்கைக்கு AuditOnline ஆகிய டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படும். வழக்கமான ஊராட்சிகள் இல்லாத பகுதிகளில் உள்ள பாரம்பரிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உட்பட சுமார் 32 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊராட்சி அலுவலர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.