உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டெட்டனஸ் மற்றும் வயது வந்தோருக்கான டிப்தீரியா (Td) தடுப்பூசியை, இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் (CRI) ஒன்றிய சுகாதார அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
- டெட்டனஸ் (இரணஜன்னி), டிப்தீரியா (தொண்டை அடைப்பான்) ஆகிய இரண்டு பாக்டீரியா நோய்களிலிருந்து Td தடுப்பூசி பாதுகாக்கிறது; இது வளரிளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கானது.
- அரசு நிறுவனத்திலேயே தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்வது, உள்நாட்டுத் தடுப்பூசி விநியோகத்தை வலுப்படுத்தி வெளிச்சார்பைக் குறைக்கிறது.
- கசௌலி CRI, தடுப்பூசி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும்.