விசாரணைகளை விரைவுபடுத்த, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ - POCSO) சட்டத்தின் கீழ் 26 நீதிமன்றங்களையும், போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் 4 நீதிமன்றங்களையும் அமைக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 26 போக்சோ நீதிமன்றங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களும் 14 கூடுதல் நீதிமன்றங்களும் அடங்கும்; இதற்காக ₹46.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 22 போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன; புதியவற்றுடன் 47 காவல் மாவட்டங்களில் மொத்தம் 48 போக்சோ நீதிமன்றங்கள் இருக்கும். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்குக் காலத்தே நீதி கிடைப்பதை இவை உறுதிசெய்யும். ஏற்கெனவே 11 NDPS சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன; காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மேலும் நான்கு அமைக்கப்படும். இதன் மூலம் NDPS சட்டம், 1985-இன் கீழான வழக்குகளை விசாரிக்கத் தமிழ்நாட்டில் 15 NDPS சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கும்.