எர்த்ஷாட் பரிசு 2026-இன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட முதலாவது ஐ கேன் எர்த்ஷாட் சவால் 2026 (I CAN Earthshot Challenge 2026) போட்டியில் தமிழ்நாட்டின் இரண்டு பள்ளிகள் வெற்றி பெற்றன. சென்னை காளிகி ரங்கநாதன் மான்ட்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 'இயற்கையைப் பாதுகாத்து மீட்டெடுத்தல்' (Protect and Restore Nature) பிரிவிலும், திருவாரூர் SSATN ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 'கழிவில்லா உலகை உருவாக்குதல்' (Build a Waste-Free World) பிரிவிலும் வென்றன.