காவிரி–தெற்கு வெள்ளாறு–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் (CVG Link) கீழ் பணிகளை மேற்கொள்வதிலிருந்து தமிழ்நாட்டைத் தடுக்கக் கோரி கர்நாடகா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. காவிரியின் உபரி நீரை தமிழ்நாட்டின் தெற்கு வெள்ளாறு, வைகை, குண்டாறு ஆற்றுப் படுகைகளுக்குத் திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை மேற்கொள்ளும் முன் தமிழ்நாடு ஒன்றிய அரசின் கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. முதல் கட்டப் பணிகளில் சிலவற்றைத் தமிழ்நாடு ஏற்கெனவே முடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, மூன்று கட்டங்களுக்கும் தடை கோரியது. காவிரி உபரி நீரின் பயன்பாடு மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு இடையிலான நீர்ப் பகிர்வு உரிமைகள் தொடர்பானது இந்தச் சர்ச்சை.