தெற்கு இந்தியப் பெருங்கடல் மீன்வள ஒப்பந்தத்தில் (SIOFA) இந்தியா இணைவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7 ஜூலை 2006 அன்று ரோமில் கையெழுத்தான இவ்வொப்பந்தம் ஜூன் 2012-ல் நடைமுறைக்கு வந்தது; தெற்கு இந்தியப் பெருங்கடலின் மீன்வளங்களைப் பாதுகாத்து நிலையான முறையில் பயன்படுத்துவதே இதன் நோக்கம். மீன்கள், மெல்லுடலிகள், ஓட்டுமீன்கள் மற்றும் பிற நகரா உயிரினங்களை இது உள்ளடக்குகிறது; ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) கீழ் வரும் நீண்ட தூரம் வலசை போகும் இனங்கள் இதில் சேராது. உறுப்பு நாடுகளின் கூட்டம், அறிவியல் குழு, செயலகம் ஆகியவை இதன் முக்கிய அமைப்புகள். இதில் இணைவதால் முடிவெடுப்பில் இந்தியா முழுமையாகப் பங்கேற்கவும், அறிவியல் தரவுகள் மற்றும் ஆராய்ச்சிகளைப் பெறவும், இந்திய மீனவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் புதிய மீன்பிடி வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.