பால்வீதி (Milky Way) விண்மீன் திரளுக்குள் “லோகி” (Loki) என்ற மறைந்திருக்கும் பண்டைய குள்ள விண்மீன் திரள் இருப்பதாக விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர். குள்ள விண்மீன் திரள் என்பது பால்வீதி போன்ற பெரிய விண்மீன் திரள்களை விடக் குறைவான நட்சத்திரங்களையும் குறைந்த நிறையையும் கொண்ட சிறிய விண்மீன் திரளாகும். சூரியனிலிருந்து 2 கிலோபார்செக் தொலைவுக்குள் உள்ள 20 பழைய, உலோகக் குறைவுள்ள நட்சத்திரங்களை நிறமாலையியல் (spectroscopy) முறையில் ஆய்வுக்குழு ஆராய்ந்தது. இந்நட்சத்திரங்கள் நேர்த்திசை (prograde), எதிர்த்திசை (retrograde) இயக்கம் இரண்டையும் காட்டின; அதாவது சில பால்வீதியின் சுழற்சித் திசையிலும் சில எதிர்த் திசையிலும் நகர்கின்றன. சூப்பர்நோவாக்கள், நியூட்ரான் நட்சத்திர இணைப்புகளில் உருவான வேதித் தனிமங்களை ஆராய ESPaDOnS என்ற உயர் தெளிவுத்திறன் கொண்ட நிறமாலை-முனைவாக்கமானி (spectropolarimeter) பயன்படுத்தப்பட்டது.