இந்திய ராணுவத்துக்காக டுங்குஸ்கா (Tunguska) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பைக் கொள்முதல் செய்ய, ரஷ்யாவின் JSC ரோசோபோரோன்எக்ஸ்போர்ட் (Rosoboronexport) நிறுவனத்துடன் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ₹445 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான ராணுவத்தின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். ரோசோபோரோன்எக்ஸ்போர்ட் ரஷ்யாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகளைக் கையாளும் முகமையாகும்; இந்த ஒப்பந்தம் இந்தியா–ரஷ்யா இடையேயான நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.