அன்னமய்யா மாவட்டத்தின் மதனப்பள்ளியில் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான உலகத் தோட்டக்கலை மையத்துக்கு (Global Horticulture Hub) ஆந்திரப் பிரதேசம் அடிக்கல் நாட்டியுள்ளது. ‘ராயலசீமா ரைசிங்’ (Rayalaseema Rising) என்றும் அழைக்கப்படும் இத்திட்டம் 10 மாவட்டங்களை உள்ளடக்கி, 303 மண்டலங்கள், 5,869 கிராமங்களில் பரவியுள்ள 201 தொகுப்புகளாக (clusters) செயல்படுத்தப்படும். ராயலசீமா பகுதியில் பழம், காய்கறி சாகுபடி, பதப்படுத்துதல், சந்தை இணைப்புகளை விரிவுபடுத்தி மாநிலத்தை முன்னணித் தோட்டக்கலை உற்பத்தியாளராக மாற்றுவது இதன் நோக்கம்.