ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் அமைந்துள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
2014-ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முதல் பசுமைவெளி (Greenfield) சர்வதேச விமான நிலையம் இதுவாகும். ஆங்கிலேயருக்கு எதிராக ரம்பா கிளர்ச்சியை வழிநடத்திய பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் பெயர் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது.