சுகாதாரம் சார்ந்த நிதிப் பலன்களைத் தேசிய ஓய்வூதிய அமைப்புடன் (NPS) இணைக்கும் NPS ஸ்வஸ்த்யா ஓய்வூதியத் திட்டத்தை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) முன்னோட்ட அடிப்படையில் தொடங்கியுள்ளது. சந்தாதாரர்கள் புறநோயாளி, உள்நோயாளி மருத்துவச் செலவுகள் இரண்டுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இது NPS-இன் பல்திட்டக் கட்டமைப்பின் (MSF) கீழ் இயங்கும் விருப்பத்தின் பேரிலான, பங்களிப்பு அடிப்படையிலான திட்டம். ஓய்வுக்கால சேமிப்பை மருத்துவச் செலவுகளுடன் இணைப்பதன் மூலம், நீண்டகால ஓய்வூதியத் தொகுப்பைப் பாதிக்காமல் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கச் சந்தாதாரர்களுக்கு உதவுவது இதன் நோக்கம்.