மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தனது ஸ்வயான் (SwaYaan) முன்முயற்சியின் கீழ், ட்ரோன் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய புத்தாக்கச் சவாலின் இரண்டாம் பதிப்பான NIDAR 2.0 (2026-27)-ஐத் தொடங்கியுள்ளது. இந்தச் சவால் இந்திய ட்ரோன் கூட்டமைப்புடன் (Drone Federation India) இணைந்து நடத்தப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைக்கடத்திச் சில்லுகளால் இயங்கும் ட்ரோன்களை உருவாக்குவதை ஊக்குவித்து, உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதும், இறக்குமதி உதிரிபாகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.