உத்தரப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை-927-இல் பாராபங்கி முதல் பஹ்ராய்ச் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சாலை மேம்பாடு இந்தியா–நேபாளம் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. ரூபைடிஹா–நேபாள்கஞ்ச் வழித்தடம் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை இது ஊக்குவிக்கும் என்றும், இரு அண்டை நாடுகளுக்கிடையே பொருட்கள் மற்றும் மக்களின் போக்குவரத்தை வேகமாகவும் எளிதாகவும் மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.