2030-ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் (MT) நிலக்கரி வாயுவாக்கத் (coal gasification) திறனை அடைவதே தேசிய நிலக்கரி வாயுவாக்க இயக்கத்தின் இலக்கு என நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 75 மில்லியன் டன் (MTPA) நிலக்கரி பயன்படுத்தப்படும். முதலீட்டை ஈர்க்க, தகுதியான ஆலை மற்றும் இயந்திரங்களின் செலவில் 20% வரை நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.