நாசாவின் MAVEN விண்கலத் தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் ஆழத்தில் ஸ்வான்–வுல்ஃப் விளைவை (Zwan–Wolf effect) முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
- 2023 டிசம்பரில் ஏற்பட்ட சூரியப் புயலின்போது இந்நிகழ்வு பதிவானது.
- காந்தப்புலக் குழாய்கள் (flux tubes) எனப்படும் காந்த அமைப்புகளின் வழியே மின்னூட்டத் துகள்கள் அழுத்தப்படுவதே ஸ்வான்–வுல்ஃப் விளைவு ஆகும்.
- செவ்வாயில் இது சுமார் 200 கி.மீ.க்குக் கீழே உள்ள அயனி மண்டலத்தில் (ionosphere) காணப்பட்டது; விண்வெளி வானிலை நிகழ்வுகளின்போது அங்கு மின்னூட்டத் துகள்கள் நெருக்கப்பட்டு மறுபகிர்வு செய்யப்பட்டன.
சூரியச் செயல்பாடு செவ்வாயின் வளிமண்டலத்தையும் அதன் காலநிலைப் பரிணாமத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இக்கண்டுபிடிப்பு உதவுகிறது.