தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளில் உள்ள ஆன்டிலோப் பவளப்பாறையில் (Antelope Reef) நில மீட்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முதல் கட்டத்தை சீனா நிறைவு செய்துள்ளது. சுமார் 6 கி.மீ பரப்பிலான இப்பகுதியில் ஹெலிகாப்டர் தளம், 680 மீட்டர் படகுத்துறை, ஆழ்கடல் துறைமுகம், 3 கி.மீ ஓடுதளம் அமையக்கூடும். இவை வானிலை முன்னறிவிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கானவை என சீனா கூறுகிறது; முழு பாராசெல் தீவுகளுக்கும் வியட்நாம் உரிமை கோருகிறது; 1974 முதல் சீனா நடைமுறைக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. தென் சீனக் கடலுக்கு சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் உரிமை கோருகின்றன; ஐ.நா. கடல் சட்ட உடன்படிக்கை (UNCLOS) அனுமதிப்பதற்கு அப்பாற்பட்ட சீனாவின் வரலாற்று உரிமைக் கோரிக்கைகளை 2016 நடுவர் தீர்ப்பாயம் நிராகரித்தது. இந்தியாவின் கடல் வர்த்தகத்தில் 55%-க்கும் மேல் தென் சீனக் கடல், மலாக்கா நீரிணை வழியாகச் செல்வதால், இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியமானது.