குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத (non-GMO) உயர் விரிவாக்க பாப்கார்ன் மக்காச்சோளக் கலப்பின விதையை வெளியிட்டார். இந்நிகழ்வு ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூரு மாவட்டம் முசுனூருவில் நடைபெற்றது. இந்த உள்நாட்டுக் கலப்பின விதை, உயர் விரிவாக்க பாப்கார்ன் உற்பத்திக்காக கௌர்மெட் பாப்கார்னிகா (Gourmet Popcornica) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.