ஒன்றிய சுகாதார அமைச்சகமும் உலகளாவிய சுகாதார அமைப்புகளும் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் (UIP) 'ஹெக்சாவேலன்ட்' (ஆறு-ஒன்றில்) தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது செயல்திறனை மேம்படுத்தும் எனக் கண்டறியப்பட்டது.
இது தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமல், ஹெபடைடிஸ் B, ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளுயன்சா வகை b (Hib), போலியோ ஆகிய ஆறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது; குழந்தைகளுக்கான ஊசி எண்ணிக்கை, சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமை, குளிர்சங்கிலித் தேவை ஆகியவற்றைக் குறைக்கும். இந்தியா ஆண்டுக்குச் சுமார் 2.6 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துகிறது. தொடக்கச் செலவு அதிகமானாலும் விலை குறைந்தால் ஒட்டுமொத்தச் சேமிப்பு ஏற்படும்; பென்டாவேலன்ட் மற்றும் பகுதி IPV தவணைகளுக்கு மாற்றாக இது அமையலாம்.