மகாராஷ்டிராவில் அமையவுள்ள இந்தியாவின் முதல் கடல்சார் (offshore) விமான நிலையத்துக்கான முன்மொழிவுக்கு, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பால்கர் மாவட்டத்தின் கோரே கடற்கரை அருகே இந்த விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மும்பை பெருநகரப் பகுதியின் (MMR) மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகச் செயல்படும்.