ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற முதல் சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் (International Security Forum - ISF) இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றார். ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புக் குழு (Security Council) ஏற்பாடு செய்த இம்மன்றத்தில் பல நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு வல்லுநர்கள் கலந்துகொண்டனர். பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, பிராந்திய மோதல்கள், உத்திசார் நிலைத்தன்மை, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டன. எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களைக் கூட்டாக எதிர்கொள்வதும் பன்முனை, பாதுகாப்பான உலக ஒழுங்கை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.