உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான நீதி அணுகலை மேம்படுத்தும் 'ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள்' (Agreed Conclusions) கட்டமைப்பை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற மகளிர் நிலை ஆணையத்தின் (CSW) 70-வது அமர்வில் இது ஒருமனதாக ஏற்கப்பட்டது. இக்கட்டமைப்பு சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியது அல்ல; நீதி அமைப்புகளை மேம்படுத்த உறுப்பு நாடுகளுக்கான வழிகாட்டுக் கொள்கையாகச் செயல்படுகிறது. பாரபட்சமான சட்டங்களை நீக்குதல், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குச் சம சட்ட உரிமைகளை உறுதி செய்தல், இணையவழி மற்றும் நேரடி வன்முறைக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்துதல், ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது.