லைசோசோமல் சேமிப்புக் கோளாறுகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட, அரசு ஆதரவு பெற்ற முதல் தேசிய உயிரி வங்கியை இந்தியா அமைத்தது. குறிப்பிட்ட நொதிகளின் பற்றாக்குறையால் செல்களில் தீங்கான பொருட்கள் தேங்குவதால் ஏற்படும் பரம்பரை வளர்சிதை மாற்ற நோய்கள் இவை. இந்த அரிய நோய்களுக்கான ஆராய்ச்சி, நோயறிதல், சிகிச்சை மேம்பாட்டுக்கு உதவ, இவ்வுயிரி வங்கி மாதிரிகளையும் தரவுகளையும் சேமிக்கும். இத்தகைய கோளாறுகள் பெரும்பாலும் தாமதமாகக் கண்டறியப்படுவதாலும், சிகிச்சைகள் விலையுயர்ந்தவை என்பதாலும், பிரத்யேகத் தேசியக் களஞ்சியம் விரைவான நோயறிதலையும் நோயாளர் பராமரிப்பையும் மேம்படுத்த உதவும்.