பொதுச் சுகாதார நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா, 'கல்வித்துறைக்கு அப்பாற்பட்ட தாக்கம்' (Impact Beyond Academia) பிரிவில் வைலி ஆராய்ச்சி நாயகர்கள் பரிசு 2025-ஐப் (Wiley Research Heroes Prize) பெற்று, இப்பரிசை வென்ற முதல் இந்தியரானார். பொதுக் கொள்கையையும் சமூகத்தையும் வடிவமைக்கும் ஆய்வாளர்களை இப்பரிசு கௌரவிக்கிறது. முன்னாள் WHO அதிகாரியான டாக்டர் லஹாரியா, நோய்த்தடுப்புத் திட்டங்கள், தாய்–சேய் நலம், ஆரம்ப சுகாதாரம் ஆகிய துறைகளில் பணியாற்றுகிறார். டாக்டர் நம்ரதா பதக், டாக்டர் குலூத் அல்சாயேக், டாக்டர் நந்திதா கருட், டாக்டர் இம்மானுவேல் பெப்ரா ஆகியோர் 2025-இன் பிற விருதாளர்கள்.