இந்தியாவின் முக்கியப் பொருளாதாரக் குறியீடுகளுக்குப் புதிய அடிப்படை ஆண்டுகளை ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) அறிவித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIP) ஆகியவை 2022-23 அடிப்படைக்கும், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 2024 அடிப்படைக்கும் மாறுகின்றன. திருத்தப்பட்ட தொடர்கள் 2026 பிப்ரவரி 12 (CPI), 2026 பிப்ரவரி 27 (GDP), 2026 மே 28 (IIP) ஆகிய தேதிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டன. அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களை மேலும் துல்லியமாகவும், வெளிப்படையாகவும், பொருத்தமாகவும், சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடியதாகவும் மாற்றுவதே இதன் நோக்கம்.