ஒன்றியப் பழங்குடியினர் விவகார அமைச்சகம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான 'ஜாகோ' (Jago) என்ற உரையாடல் மென்பொருளை (chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமைச்சகத்தின் பழங்குடியினர் நலத் திட்டங்கள், கொள்கைகள், செயல்திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது. அரசின் நலத் தகவல்களைப் பழங்குடியின மக்களும் பிற பங்குதாரர்களும் எளிதில் அணுக உதவுவதே இதன் நோக்கம்.