2026 மார்ச் 21 அன்று மார்ச் சம இரவு நாள் (March equinox) நிகழ்ந்தது.
- சூரியன் நிலநடுக்கோட்டைத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிக் கடக்கும் தருணம் இது.
- வடக்கு அரைக்கோளத்தில் வசந்தகாலத் தொடக்கத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இலையுதிர்காலத் தொடக்கத்தையும் இது குறிக்கிறது.
- இந்நாளில் உலகெங்கும் பகலும் இரவும் ஏறத்தாழ சமமாக இருக்கும்; ‘equinox’ என்றால் ‘சம இரவு’.
- சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது; சம இரவு நாள் ஆண்டுக்கு இருமுறை, மார்ச் மற்றும் செப்டம்பரில் நிகழ்கிறது.
- மார்ச் சம இரவு நாள் வசந்தகாலச் சம இரவு நாள் (Vernal Equinox) அல்லது வடதிசைச் சம இரவு நாள் (Northward Equinox) என்றும் அழைக்கப்படுகிறது.