குடியேற்றம், விசா, வெளிநாட்டவர் பதிவு மற்றும் கண்காணிப்பு (IVFRT) திட்டத்தை 2026 ஏப்ரல் 1 முதல் 2031 மார்ச் 31 வரை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2010-ல் முதன்முதலில் தொடங்கப்பட்ட IVFRT, விசா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் பதிவு நடைமுறைகளை நிர்வகிக்கும் எண்ணிமத் தளம் ஆகும்; வெளிநாட்டினர் தொடர்பான செயல்திறன், பாதுகாப்பு, கண்காணிப்பை இது மேம்படுத்துகிறது. விரைவான குடியேற்ற அனுமதிக்கு கைபேசிச் சேவைகள், சுய சேவை மையங்கள் (kiosks) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் நீட்டிக்கப்பட்ட திட்டத்தில் பயன்படுத்தப்படும்.